மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக யான்சி என்ற பெண் கார் ஏற்றி கொலை- ஆறு பேரை காவல்துறையினர்lகைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இலங்கைஅகதி முகாமைச் சேர்ந்த18 வயதான யான்சி என்ற பெண் நேற்று இரவு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் நடமாடுவது தொடர்பாக இரு தரப்பினடைய தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தொடர்ந்து யாசினி பாதியில் இருந்து வெளியேறி மற்றொருவருடன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு உள்ளார்.. அப்போது தகராறு ஈடுபட்ட நபர்கள் காரில் துரத்தி சென்று அவர் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதி விபத்தை உருவாக்கியுள்ளனர்.. கார்மோதிய வேகத்தில் இளம் பெண் யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சுமன் சக்திவேல் உள்ளிட்ட மூவரை புதுச்சேரியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தற்பொழுது வரை இவ் வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர்lகைது செய்துள்ளனர்.
Tags :


















