பொதுமக்கள் மீது முகமூடி அணிந்த கும்பல்- காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் நடத்திய கொடூர அரிவாளால்வெட்டி தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவின்போது பேனர் வைப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது இந்த முன் விரோதன் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பல் சாலையில் சென்ற பொது மக்களை அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இந்த கொடூர தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன சட்டம் ஒழுங்கு நிலை நாட்டு அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படையினர் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடத்தினர்.. இதில் சிறுவர் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முயன்ற பொழுது அவர்களை தாக்கி விட்டு தப்பிவிட முயன்றனர். இதனால் காவல்துறையினர் அவர்காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
Tags :



















