தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணத உயர்வு.தவிப்பில் சிறு உற்பத்தியாளர்கள்.

by Editor / 26-03-2025 10:02:56am
தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணத உயர்வு.தவிப்பில் சிறு உற்பத்தியாளர்கள்.

நெல்,வெங்காயம் போல தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏற்றுமதியை அரசு கட்டுபடுத்தினாலே, நுகர்வோரான சாதார ண பொதுமக்களும், தேங்காய் எண்ணெய் உற்பத்தியை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும் நிம்மதி அடைவார்கள்.

தமிழக விவசாயத்தில் முக்கிய பங்கு வகிப்பது தென்னை. தென்னை சாகுபடியில் தமிழகம் மூன்றாவது இடம் வகிக்கிறது. தென்னை மரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேங்காய் உணவுப்பொருளாகவும்,தேங்காய் எண்ணெயாகவும் பயன்படுத்தபடுதுகிறது.

தேங்காய் உற்பதியில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் கேரளா,கர்நாடகா,தமிழ்நாடு ஆகிய பகுதியில் இந்த ஆண்டு விளைச்சல் சிறப்பாக இருந்த போதிலும் தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ 282/- என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ 204/- என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ 80/- அதிகமாக விற்பனையாகி வருகிறது. மூன்று மாதங்களில் தேங்காய் எண்ணெய்  லிட்டருக்கு 90% விலை உயர்ந்து இருப்பது இதுவே முதல் முறை.

இந்த வரலாறு காணாத விலை உயர்வால், தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் நுகர்வோர்களும், சாதாரண பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு தேவையான கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்களும், தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிலில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான தொழிலாளர்களும் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

'தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் தென்னை சாகுபடியில் முன்னணி வகிப்பதால் தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியும், பயன்பாடும் அதிகம். தேங்காய் உற்பத்தி அதிகம் என்பதால், தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் விலை பெரிய மாற்றம் இல்லாமலே பல ஆண்டுகளாக விற்பனையாகி வருகிறது. 

இந்தநிலையில் தெ ன் மாநிலங்களில் பருவநிலை சிறப்பாக அமைந்து, தேங்காய் உற்பத்தி நடப்பு ஆண்டில் அதிகமாக இருந்த நிலையிலும் கடந்த மூன்று மாதங்களில் தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் 90% அதிகரித்துள்ளது. இப்படி விளைச்சல் அதிகமாக இருந்த நிலையிலும் தேங்காய் எண்ணெய் விலை உயர காரணம், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் அதிக அளவில் ஏற்றுமதி ஆவதே காரணம் என்றும் 

குறிப்பாக நம்மை போலவே தேங்காயையும்,தேங்காய் எண்ணெயையும் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தோனேசியா, இந்த நாட்டில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் உற்பத்தி பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த பாதிப்பை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து பெருமளவு தேங்காய் இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு போதுமான கொப்பரை கிடைக்காமல், கொப்பரை தட்டுபாடு ஏற்பட்டு,ஒரு கிலோ கொப்பரை கடந்த நான்கு மாதத்தில் ரூ 90/- உயர்ந்துள்ளது. இதனாலயே தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ 282/- என்ற வரலாறு காணாத விலையை எட்டியுள்ளது.

இதுவரை விலை உயர்வு பெரிய பாதிப்பை தமிழகத்தில் ஏற்படுத்த வில்லை என்றாலும்,தற்போது தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் சாதாரண  பொதுமக்கள் விலை ஏற்றத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொப்பரை விலை உயர்வு மட்டுமல்ல,தட்டுபாடும் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் ஆலைகளும் தற்போது திகைத்து வருகின்றன.இதனால் தேங்காய் எண்ணெய் ஆலையில் பணியாற்றும் லட்சகணக்கணக்கான வேலை ஆட்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு இதை உணர்ந்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவோர் நலன் வேண்டியும், தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிலை நம்பி உள்ள லட்சகணக்கான ஊழியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டும் தேங்காய் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் உள்நாட்டில் அரிசி மற்றும் வெங்காய பற்றாக்குறை ஏற்பட்ட போது மத்திய அரசு வெங்காயம் மற்றும் அரிசி ஏற்றுமதியை தடை செய்து உள்நாட்டு வணிகத்தை காப்பாற்றியது. அதுபோல தற்போது தேங்காய் ஏற்றுமதியையும் தடை செய்து உள்நாட்டு தேங்காய் எண்ணெய் வணிகத்தை காப்பற்ற வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசிடம் தேங்காய் ஏற்றுமதியை கைவிட வலியுறுத்த வேண்டும்' என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags : தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணத உயர்வு.தவிப்பில் சிறு உற்பத்தியாளர்கள்.

Share via