நெல்லை நெப்போலியன் என்று வர்ணிக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன் காலமானார்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக மற்றும் திமுகவினரால் நெல்லை நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அதிமுக நிர்வாகியும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன், இன்று அதிகாலை நெல்லையில் காலமானார்.
அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான இவர், 2000ம் ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்படவே, திமுகவில் இணைந்தார்.
2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ. ஆக தேர்வான இவர், 2015ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
2016ல் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் இணைந்தார்.அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் மாவட்ட செயலாளராக பணியாற்றியவர்.அரசியலில் ஆளுமைகொண்டநபராக கருப்பசாமி பாண்டியன் திகழ்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே .
Tags : நெல்லை நெப்போலியன் என்று வர்ணிக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன் காலமானார்.