தூத்துக்குடி ரவுடி என்கவுண்டரில் நடந்தது என்ன? :எஸ்பி ஜெயக்குமார்

by Editor / 16-10-2021 06:19:49pm
தூத்துக்குடி ரவுடி என்கவுண்டரில்   நடந்தது என்ன? :எஸ்பி ஜெயக்குமார்

 

தூத்துக்குடியில் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு ரவுடி தப்ப முயன்றதால் போலீசார் என்கவுணட்டர் நடத்தியதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எண்கவுன்டரில் கொல்லப்பட்ட துரைமுருகன் மீது தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 8 மாவட்டங்களில் 7 கொலை வழக்கு, 21 வழிப்பறி, 6 திருட்டு உட்பட 35 வழக்குகள் உள்ளன. 2015 ஆண்டு முதல் அவர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். மேலும், தனது நண்பர் ரஜினி முருகன், உட்பட 7பேரை கடத்தி கொலை செய்து சடலத்தை புதைத்துள்ளார்

 

இந்நிலையில், கடந்த வாரம் பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்தனர். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தனிப்படை போலீசார் தூத்துக்குடியில்  தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் துரைமுருகன் உட்பட 3பேர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு, மற்றும் காவலர் டேவிட் ஆகியோர் துரைமுருகனை சுற்றி வளைத்தனர்.

அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டியதால் சப் இன்ஸ்பெக்டர் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதில் துரைமுருகன் உயிரிழந்துவிட்டார். காயம் அடைந்த 2 காவலர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

 

 

Tags :

Share via