ரூ.6 கோடி வெகுமதியுடன் அரசு வேலை... தங்க மகனுக்கு அசத்தல் பரிசு...

by Admin / 08-08-2021 09:46:38pm
ரூ.6 கோடி வெகுமதியுடன் அரசு வேலை... தங்க மகனுக்கு அசத்தல் பரிசு...



பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான மையத்தை உருவாக்க உள்ளதாகவும், அங்கு நீரஜ் சோப்ரா விரும்பினால் தலைவராக பதவி வகிக்கலாம் என்றும் அரியானா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
 
இந்நிலையில், நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி ரூபாய் வெகுமதியுடன், அரசு வேலை வழங்கப்படும் என அரியானா முதலமைச்சர் கட்டார் அறிவித்துள்ளார்.

பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான மையத்தை உருவாக்க உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அங்கு நீரஜ் விரும்பினால் அவர் தலைவராக பதவி வகிக்கலாம் என்றும், மற்ற வீரர்களைப் போல அவருக்கு 50 சதவீத சலுகையுடன் ஒரு வீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo