புனலூர்- செங்கோட்டை இடையே மின்மயமாக்கும் பணிகள் தொடங்கியது.

by Editor / 20-07-2022 12:45:42pm
புனலூர்- செங்கோட்டை இடையே மின்மயமாக்கும் பணிகள் தொடங்கியது.

கொல்லம் செங்கோட்டை இடையே அகல  ரயில் பாதையில் புனலூர் முதல் செங்கோட்டை இடையே மின்மயமாக்கும்  பணிகள் தொடங்கி உள்ளன. புனலூர் முதல் செங்கோட்டை வரை ஐம்பத்தி ஒன்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு  மின்கம்பங்கள் அமைப்பதற்கு சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இரும்பு தூண்கள் நடுவதற்கு காங்கீரீட் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள 13 சுரங்கங்கள் மற்றும் பாலங்கள்  அமைந்துள்ளன.புனலூரில் இருந்து செங்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணி நிறைவடைந்தால்  கொல்லம் செங்கோட்டை ரயில் பாதையை முழுமையாக மின்மயமாக்கப்பட்ட ரயிலில் பகுதியாக மாறிவிடும். புணலூர் செங்கோட்டை வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி கடந்த மூன்று மாதங்களாக நடந்து வருகின்றன பூர்வாங்க பணிகள் தற்பொழுது தொடங்கியுள்ளன. புணலூர் செங்கோட்டை இடையே மின் மயமாக்கும் பணிகள் நிறைவடைந்த பின்பு ஏராளமான ரயில்கள்  மற்றும் சரக்கு ரயிலில் இந்த வழியாக இயங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக பயணிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via