அட்டகட்டி முதல் ஆழியார் பகுதியில் கன மழை பாறைகள் உருண்டும் சாலையில் விழுந்தது.

by Editor / 22-05-2024 10:22:11am
அட்டகட்டி முதல் ஆழியார் பகுதியில் கன மழை பாறைகள் உருண்டும் சாலையில் விழுந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அட்டகட்டி முதல் ஆழியார் பகுதியில் கன மழை பெய்து வருவதால் 1 முதல் 6 வரையிலான கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் மண் சரிந்தும் பாறைகள் உருண்டும் சாலையில் விழுந்தது. இதனை அறிந்த  நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக பாறையை அகற்றினர். மரங்கள் முறிவு ஏற்பட்டு விழுந்ததை அகற்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்படா தவாறு சரி செய்யப்பட்டது. நெடுஞ்சாலை துறையினருடன் வால்பாறை வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் ,காவல் துறை வனத்துறை அதிகாரிகளும் மேற்படி இரவு பகலாக பணிகளை துரிதமாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் மலை பகுதியில் பயணம் செய்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்த பட்டுள்ளனர்.
வால்பாறையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இரவு நேரங்களில் பாறைகள் விழுந்தது மற்றும் மண் சரிவு ஏற்பட்டது.நெடுஞ்சாலை துறையினர் சரி செய்தனர்.மழையின் காரணமாக கூழாங்கல் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.காலை 8 மணிக்கு தடையை மீறி சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் குளித்தனர்.

 

Tags : உருண்டும் சாலையில் விழுந்தது.

Share via