பழிக்கு பழி ஆயுதங்களுடன் திட்டம் தீட்டிய ஆறு பேரை தட்டி தூக்கி அதிரடி காட்டிய போலீஸ்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பூவனூர் பகுதியில் முன்னர் நடந்த கொலை வழக்கு தொடர்பாக பழிவாங்கும் நோக்கத்துடன் ஆயுதங்களைக் கொண்டு திட்டம் தீட்டி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவலின் அடிப்படையில் பூவனூர் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு ஆயுதங்களுடன் நாகநாதன், அன்பரசன், ஷியாம், தயாநிதி மாறன், ரவிச்சந்திரன், பிரகதீஷ், ஆகிய ஆறு பேர் இருந்துள்ளனர்.விசாரணையில் கொலை செய்யும் குற்ற நோக்கத்தில் ஆயுதங்களுடன் திட்டம் தீட்டியதாக தெரிவித்ததையடுத்து ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் ஆயுதங்களுடன் சட்ட விரோத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டிய ஆறு நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.மேலும் கொலை கொள்ளை அடிதடி மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags :














.jpg)




