‘ராக்கெட்’ வேகத்தில் உயர்ந்த சிலிண்டர் விலை: 1,000 ரூபாயை

by Staff / 26-03-2022 02:20:07pm
‘ராக்கெட்’ வேகத்தில் உயர்ந்த சிலிண்டர் விலை: 1,000 ரூபாயை

பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே அப்போது கியாஸ் அடுப்பு இருந்தது. ஆனால், ஏழை-எளிய, நடுத்தர மக்களின் வீடுகளில் விறகு அடுப்புதான் இருந்தது. சமையல் செய்யும் போது, குபுகுபுவென எழும் கரும்புகை, நீண்ட நேர வேலை, பாத்திரங்கள் கரிப்பிடித்தல் என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலேயே ஒவ்வொரு நாளும் குடும்ப தலைவிகளுக்கு கடந்தது. மழை காலங்களில் விறகை தண்ணீர் படாமல் பாதுகாத்து வைப்பதே கடினமான வேலையாக இருக்கும்.

இப்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து செல்வதை பார்க்கும்போது, மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது விறகு அடுப்புக்கு போகலாம் என்று குடும்ப தலைவிகள் நினைத்தாலும், அதற்குரிய கட்டமைப்பில் இப்போதைய வீடுகள் இல்லை. விறகு விற்பனை செய்வதற்கான கடைகளும் இல்லை. இதனால், வேறு வழியில்லாமல், அதிக விலை என்றாலும் கியாஸ் சிலிண்டரைத்தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் குடும்ப தலைவிகள் உள்ளனர்.

5 ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த சிலிண்டர் விலை

பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.352.45 என்று இருந்தது. அதன் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக விலை அதிகரித்து கொண்டே வந்தது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி நிலவரப்படி, ரூ.594.50 என்று இருந்தது.

அதனைத் தொடர்ந்தும் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே காணப்பட்டு வருகிறது. இடையிடையே சற்று விலை குறைந்திருந்தாலும், பெருமளவில் விலை அதிகரித்து இருந்ததையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கடந்த 22-ந்தேதி விலை உயர்வுக்கு பிறகு, ஒரு சிலிண்டரின் விலை ரூ.965.50 என்று இருக்கிறது. இதுதான் வீட்டு உபயோக சிலிண்டரின் அதிகபட்ச விலையாக உள்ளது.

 தற்போதுள்ள சிலிண்டரின் விலையான ரூ.965.50 உடன், சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வரும் நபருக்கு வழங்கும் ‘டிப்ஸ்’ தொகையையும் சேர்த்தால், 1,000 ரூபாயை கடந்துவிடும். இல்லத்தரசிகளின் மாதாந்திர வீட்டின் மொத்த பட்ஜெட்டில் பெரிய தொகையை, சிலிண்டர் விலைதான் இடம்பிடித்துள்ளது. இதனால் மற்ற பொருட்களின் தேவையை சற்று குறைத்திருப்பதாக கவலையோடு தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via