இந்தியர்களின் பெருமையின் அடையாளம்-
உலக அளவில் ,இந்தியா சிறப்பு பெறுவதற்கு அதன் ஆன்மீக வெளிப்பாடும் கலை,பண்பாடும்தான் காரணம். கலைகளின் வழி ஆன்மீகத்தை செழிக்க செய்ய மேற்கொண்ட முயற்ச்சியே ,கோவில்களும் சிற்ப வெளிப்பாடுகளும். சிற்பங்கள்தான் அன்றைய காட்சி ஊடகத்தின் உன்னத வெளிப்பாடு.பார்க்கிற ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு சூட்சுமத்தை புலப்படுத்தியதோடு ரசனையைத்தூண்டி காட்சி இன்பத்தை நுகரச்செய்யும் வாயில்களாக சிற்பங்கள் இருந்தன.
இந்து மதத்திலிருந்து தோன்றிய பெளத்த மதமும் சமண மதமும் தம் தாய் மதத்தை பின் பற்றி கலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல்வேறு கலை பொக்கிஷங்களை உருவாக்கினர்.அதில் இன்றளவும் ஒளி மங்காது பிரகாசித்து கொண்டிருப்பவைகளுள் அஜந்தா-எல்லோரா குகை சிற்பங்களும் ஒன்றாகும்.
அஜந்தா
மகாராஷ்டிராவின் வியாபாரம் செழித்த ஊர் ஔரங்காபாத்.வரலாற்று புகழ் வாய்ந்த ஊர்.இது முகலாய மன்னன் ஔரங்கசிப் பெயரை கொண்டது. 1659-1707 காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஊர்.இதன் பழைய பெயர் கிட்கி அதாவது ஜன்னல்.
சுல்தான் சந்த் பீபி மகன் மரக் அம்பர் பெயரால் மாவட்டமாக உள்ளது. ஔரங்கசிப்பின் தலை நகராக விளங்கியது.இவருக்கு பின் நிசாம் உல் முல்க் தலைநகராக இருந்தது.1947 சுதந்திரத்திற்கு பின் இது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள மகாராஷ்டிரா.இந்த ஊர் பல்வேறு சிறப்புகள் கொண்டது டியோகிரி பிரதிஸ்தான் நாகரிகங்களின் முன்னோடி யான நாகரிகத்தை கொண்டது.முக்கியமான சுற்றுலா இடமாக இது றிவருகிறது.அதற்கு முக்கியமான பகுதி அஜந்தாவும் எல்லோராவும்தான்.இதை ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் பார்த்து ஆக வேண்டிய இடம்.
Tags :