பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி நாய் சாவு
இயக்குநர் மாரிசெல்வராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமம். தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் திரை உலகில் அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் தனது சொந்த ஊரான புளியங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருப்பார்.அந்த படத்தில் கருப்பி என்ற செல்லப்பிராணி முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த கருப்பி செல்லப்பிராணியை சுற்றி படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்..இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த கருப்பி செல்லப்பிராணி நேற்று தீபாவளி அன்று ஊரில் பட்டாசு வெடித்த போது பயந்து ஓடியுள்ளது. அப்போது சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் ,செல்லப்பிராணி பரிதாபமாக உயிரிழந்தது..இதையடுத்து உயிரிழந்த கருப்பி செல்லப்பிராணியின் உரிமையாளரும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த விஜய முத்து மற்றும் ஊரைச் சேர்ந்தவர்கள் கருப்பி செல்லப்பிராணிக்கு மாலை அணிவித்து பரம்பு பகுதியில் நல்லடக்கம் செய்தனர்.
Tags : பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி செல்லப்பிராணிமரணம்.