. ஓபிஎஸ் என்கிற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது புகழேந்தி பேட்டி

மதுரை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர் அணி மீட்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், "தமிழ் மொழிக்காக நாம் கட்சி பாகுபாடின்றி இணைந்து செயல்பட வேண்டும். அதிமுக கொடியுடன் தொண்டர்களைத் திரட்டி இந்திக்கு எதிராகப் போராடுவேன். பொதுச்செயலாளரைவிட உயர்ந்தவர் செங்கோட்டையன் என்பதால் பழனிசாமி பெயரும் இல்லை, செங்கோட்டையன் பெயரும் இல்லை. ஓபிஎஸ்ஐ கொசு என்கிறார். கொசு மிகவும் ஆபத்தானது. மலேரியா, டெங்கு போன்றவை கொசுவிலிருந்து தான் வரும். ஓபிஎஸ் என்கிற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது." என்று கூறினார். தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு புகழேந்தி பதில் அளித்தார்.
Tags :