தூத்துக்குடியில் வரும் 7ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஜூலை 7 ஆம் தேதி, அம்மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல் திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Tags :