அதிவேகமாக மோதிய பைக்... ஒருவர் பலி

by Staff / 20-02-2025 05:05:16pm
அதிவேகமாக மோதிய பைக்...  ஒருவர் பலி

கடலூர் மாவட்டம்  கோண்டூர் பகுதியில், அதிவேகமாக சென்ற பைக் மோதிய விபத்தில், சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், கோண்டூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இன்று  உணவு வாங்கிவிட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த பைக் ஒன்று, அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சியை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via