9-ம் வகுப்பு மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 10-05-2022 11:51:05am
9-ம் வகுப்பு மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் திசையன்விளை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள்  அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கூடத்தில் நடந்த ஆண்டு இறுதித்தேர்வை எழுதினார். அப்போது அவரை சக மாணவ-மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர்  மாலையில் வீட்டுக்கு சென்ற பின்னர், இனி பள்ளிக்கூடத்துக்கு செல்ல மாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இரவில்  அவர்  தனது வீட்டில் மின்விசிறியில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags : 9-ம் வகுப்பு மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

Share via

More stories