முன்னதாகவே தொடங்கும் தென்மேற்கு பருவமழை..?

by Editor / 14-05-2024 12:25:59am
முன்னதாகவே தொடங்கும் தென்மேற்கு பருவமழை..?

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சமீப காலமாக மழை பெய்து குளிர வைத்து வருகிறது. தமிழ்நாட்டின் வருகிற நாட்களில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வரும் மே 19 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

 

Tags : முன்னதாகவே தொடங்கும் தென்மேற்கு பருவமழை..?

Share via