ஆடிப்பெருக்கு: பவானி கூடுதுறையில் இறங்க தடை

by Editor / 02-08-2022 10:02:17pm
ஆடிப்பெருக்கு: பவானி கூடுதுறையில் இறங்க தடை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி கூடுதுறையில் ஏராளமானோர் கூடுவது வழக்கம். ஏற்கெனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூடுதுறையில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நாளை (ஆக.,3) ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி கூடுதுறை ஆறுகளில் பக்தர்கள் இறங்கத் தடை என சங்கமேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் தெரிவித்தார்.

அதேபோல், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.இதன்காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இருப்பதால் ஆடிப்பெருக்கான நாளை, காவிரி ஆற்றில் வழிபாடு செய்ய தடை விதித்து நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டார்.

 

Tags : Adiperku: Bhavani banned from landing in Kuduthurai

Share via