தங்கம் -வரலாற்றில் புதிய உச்சம் - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.

by Editor / 12-04-2025 10:37:50am
தங்கம் -வரலாற்றில் புதிய உச்சம் - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதித்ததால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சம் தொட்டது. மீண்டும் இந்த வரிகளை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளதால், பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் சிலர் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, தங்கம் விலையும் கூடி வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த வகையில், ஒரு சவரன் தங்கம் விலையில் இன்று (ஏப்ரல் 12) ரூ.200 அதிகரித்து ரூ.70,120 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.25 உயர்ந்து ரூ.8,770-க்கும் விற்பனையாகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.4,360 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு முன்னர் தொடர்ச்சியாக ரூ.2,500 வரை சரிந்த தங்கத்தின் விலை, அடுத்த நான்கே நாட்களில் ரூ.4,500 வரை உயர்வைச் சந்தித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், இன்றைய நிலவரப்படி சென்னையில், 24 கேரட் தங்கம் நேற்றைய விலையில் ரூ.27 உயர்ந்து கிராமுக்கு ரூ.9,567-க்கும், சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.76,536-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 8,770 -க்கும்; சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.110-க்கும், கிலோ ரூ.2,000 உயர்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 12):

  • 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.8,770
  • 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.70,160
  • 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.9,567
  • 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.76,536
  • 1 கிராம் தங்கம் (18 கேரட்) - ரூ.7,260
  • 1 சவரன் தங்கம் (18 கேரட்) - ரூ.58,080
  • 1 கிராம் வெள்ளி - ரூ.110
  • 1 கிலோ வெள்ளி - ரூ.1,10,000
 

Tags : நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி

Share via

More stories