கன்னியாகுமரி மாவட்டத்த்தில் மாணவர்களை குறிவைத்து அதிகரிக்கும் கஞ்சா விற்பனை
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பைங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் உள்ளதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் சென்றதிதொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்திரவுப்படி புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் பைங்குளம் அருகேயுள்ள அம்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு புல்லட் பைக்கில் 3 பேர் வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது சுமார் 260 கிராம் கஞ்சா மற்றும் சிறிய தராசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் பிடித்து, கைப்பற்ற பட்ட பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் இந்த கும்பல் கஞ்சாவை பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்தவர்கள் தூத்தூர் பகுதி ஆகாஷ் (22), இனயம் புத்தன்துறை சகாயசுபின் (22), தூத்தூர் பகுதி மஜோப் (25) என தெரிய வந்தது. இதில் ஆகாஷ் என்பவர் பி எஸ் சி விஸ்வல் கம்யூனிக்கேஷன் படிக்கும் மாணவர். சகாயசுபின் கடல் தொழில் செய்பவர். மஜோப் என்பவர் கோவையில் எம். பி. எ படிக்கும் மாணவர் என தெரிய வந்தது. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மந்தபட்டவர்களை கைது செய்தனர்.
Tags :