இந்தியாவின் நடு நிலை குறித்து செனட் சபை அதிருப்தி

by Admin / 04-03-2022 04:56:10pm
இந்தியாவின் நடு நிலை குறித்து செனட் சபை  அதிருப்தி


ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும்படி இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐநா சபையில் மூன்று முறை ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை நடந்த  போது இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இது அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது இந்தியா மீது பொருளாதார தடை அறிவிக்கவும் ஜோ பைடன் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா படையெடுப்புக்கு எதிராக தெளிவான முடிவு எடுக்கும்படி அமெரிக்கா இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா தனது எல்லைகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து முரண்பாட்டை வலுத்து வரும்  நிலையும் சுட்டிக்காட்டி அமெரிக்கா அண்டை நாடுகளுடன் பிரச்சனை நீடித்த போது உள்நாட்டில் பிரதமர் மோடி சக்திவாய்ந்த தலைவராக விளங்குவதாகும்  கருத்து தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via