செல்போனில் 36 ஆபாச வீடியோக்கள்
பெங்களூருவில் யஸ்வந்த் புரத்தைச் சேர்ந்தவர் வெங்கட ரமணா. இவர் தான் வசிக்கும் அதே பகுதியில் அக்குபங்சர் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் ஆடைகளை கழட்டுமாறு கூறியுள்ளார். சிகிச்சைக்காக பெண்களும் ஆடைகளை கழட்டும் போது அரைகுறையாக இருப்பதை ரகசியமாக வீடியோவாக எடுத்து வந்துள்ளார் ரமணா. இதுபோன்று பல பெண்களின் அந்தரங்கப் பகுதிகளில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளார். பல பெண்கள் இவரை கடும் வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து இப்படி செய்து வரவும் பாதிக்கப்பட்ட பெண்கள் பசனகுடி மகளிர் காவல் நிலையத்திலும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி போலீசார் மருத்துவரை கைது செய்து விசாரித்தனர். அவரது செல்போனில் 36 ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
Tags :



















