மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறையே 59 லட்ச ரூபாய் வாடகை பாக்கி அதிர்ச்சி தகவல்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான கட்டடங்கள் மதுரை தெற்கு - மேற்கு சித்திரை வீதி சந்திப்பு மற்றும் எல்லீஸ் நகரில் உள்ளது.2017 ஆம் ஆண்டு வரை மதுரை தெற்கு - மேற்கு சித்திரை வீதி சந்திப்பு கட்டத்தில் செயல்பட்ட இணை ஆணையர் அலுவலகம் பின்னர் எல்லீஸ் நகர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது
இக்கட்டடங்களில் வாடகை அடிப்படையில் இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டலஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.மதுரை மதுரை தெற்கு - மேற்கு சித்திரை வீதி சந்திப்பு கட்டடத்திற்கு 59,080 ரூபாயும், எல்லீஸ் நகர் கட்டத்திற்கு 59,06,813 ரூபாயும் வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தினகரன் என்பவர் மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அளித்த பதிலில் 59 லட்சத்து 65 ஆயிரத்து 893 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களில் வாடகை வசூல் செய்வதில் தீவிர நடவடிக்கை மேற்க் கொள்ளும் இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல அலுவலகம் தனது வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது ஆர்.டி.ஐ வழியாக தெரிய வந்துள்ளது.
Tags : மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறையே 59 லட்ச ரூபாய் வாடகை பாக்கி அதிர்ச்சி தகவல்