செப்டோ மற்றும் ஸ்சுகி, இன்ஸ்டா மார்ட் போன்ற பிற தளங்களும்
அரசாங்கத்தின் தலையீடு காரணமா,க பிளிங்கிட், ஸ்விக்கி, ஜெப்டோ ,இன்ஸ்டால் மார்ட் போன்ற டெலிவரி நிறுவனங்களின் விரைவான வணிக தலங்கள் தங்கள் 10 நிமிட டெலிவரி வாக்குறுதியை தங்கள் பிராண்டிங்கிலிருந்து நீக்க ஒப்புக்கொண்டுள்ளன. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்டவியா டெலிவரி கால கெடு மற்றும் ஊழியர்களின் பணி நிலைமைகள் குறித்து இந்த நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் 10 நிமிட டெலிவரி போன்ற மிக விரைவான காலக்கெடு டெலிவரி ஊழியர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் இது பாதுகாப்பற்ற நடத்தைக்கும் சாலை விபத்துக்கும் வழிவகுக்கும் என்றும் அரசு கவலைக்க தெரிவித்தது. பி ளிங்கிட் நிறுவனம் ஏற்கனவே தனது பிரதான வாசகத்தை 10 நிமிடங்களில் 10 ஆயிரம் பிளஸ் தயாரிப்புகள் டெலிவரி என்பதிலிருந்து உங்கள் வீட்டு வாசலில் முப்பதாயிரம் தயாரிப்புகள் டெலிவரி என்று மாற்றியுள்ளது. செப்டோ மற்றும் ஸ்சுகி, இன்ஸ்டா மார்ட் போன்ற பிற தலங்களும் விரைவில் இதை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பான பணி சூழ,ல் நியாயமான ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு கோரி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .இந்த மாற்றம் விரைவான வணிகத்துறையில் வேகத்தை விட ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல் வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு முக்கிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது..
Tags :



















