தமிழ்நாட்டில் உள்ள 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கான தடுப்பூசி முன்பதிவு தொடங்கியது.

by Editor / 01-01-2022 04:37:19pm
தமிழ்நாட்டில் உள்ள 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கான தடுப்பூசி முன்பதிவு தொடங்கியது.


 தமிழ்நாட்டில் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ள நிலையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தமிழகத்தில் 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பள்ளி ,கல்லூரிகள் மற்றும் தடுப்பு ஊசிகள் பள்ளிகல்லூரிகளில் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி இன்று முதல் கோவின் இணையத்தில் பதிவு செய்தநபர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக தடுப்புசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி அல்லது கல்லூரி அடையாள அட்டை மற்றும் ஆதார் ஆதார் எண்ணை கோபின் இணையத்தில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் ஒரு கோடி பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 

 

Tags :

Share via