தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது-அமைச்சர் ஐ. பெரியசாமி

by Admin / 11-01-2026 01:55:15pm
 தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது-அமைச்சர் ஐ. பெரியசாமி

இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி , தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் தி.மு.க தலைமை உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை . நடப்பது தி.மு.கஆட்சிதான், இதிலும் சரி வருங்காலத்திலும் சரி யாருக்கும் ஆட்சியில் பங்கு கிடையாது என்பது முதலமைச்சர் மு .க /ஸ்டாலின் மிகத் தெளிவாக உள்ளார் என்றுகுறிப்பிட்டதோடு 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில், அதிகார பகிர்வு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டு வரும் நிலையில் , கேட்பது அவர்களது விருப்பம். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி எப்போதும் இருந்ததில்லை என்றும் உறுதிபட தெரிவித்தார்.

 

 

Tags :

Share via

More stories