நீச்சல் போட்டியில் மாணவர் மின்சாரம் பாய்ந்து பலி
பெங்களூருவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் ரோஷன் ரஷீத் என்ற மாணவர் பங்கேற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, சிபிஎஸ்இ தென் மண்டல நீச்சல் போட்டி கும்பலகோடு ரோட்டில் உள்ள என்பிஎஸ்-அகராவில், கெங்கேரி ஹோப்லி, தடகுனியில் நடந்தது.
இச்சம்பவத்தில் மாணவரின் உறவினர் அகரா நேஷனல் பப்ளிக் பள்ளி அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளித்தார். ஆறு நாள் போட்டியில் பங்கேற்க ரோஷன் பெங்களூரு வந்திருந்தார். குளத்தில் இருந்து இறங்கியவுடன் ரோஷன் திடீரென மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரோஷனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என்று உறவினர் சுலேகா ஜமாலு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அமைப்பாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீச்சல் குளம் அருகே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரோஷனின் மரணம் நிகழ்ந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்காக மைசூர் சாலையில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags :

















.jpg)

