இன்று உருவாகிறது “மாண்டஸ்” புயல்

by Editor / 07-12-2022 08:36:36am
இன்று உருவாகிறது “மாண்டஸ்” புயல்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று மாலை புயலாக வலுப்பெறும் எனவும், நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதி வழியாக நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை மறுநாள் வட தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதால், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை மறுநாள் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உருவாகும் புயலுக்கு ”மாண்டஸ் புயல்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories