சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் திருவுருவ சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்தார், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ

by Admin / 13-05-2023 02:01:36pm
 சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் திருவுருவ சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்தார்,  சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ

வீரசக்கதேவி ஆலய 67 வது ஆண்டு திருவிழா- கோவில்பட்டி அருகே சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மற்றும் தொடர் ஜோதி ஓட்டத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் அமைந்துள்ள  சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார். வீரசக்கதேவி ஆலய 67 வது ஆண்டு திருவிழாவை தொடர் ஜோதி ஓட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்தார்..இதனைத்  தொடர்ந்து  கோவில்பட்டி  இனம் மணியாச்சியில்திருமலை நாயக்கர் பேரவை சார்பில் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரசக்கதேவி ஆலய67 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்தார். இத்தொடர் ஜோதி ஓட்டம் பேருந்து நிலையம்,எட்டயபுரம் சாலை, உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு பசுந்தனை சாலை வழியாக பாஞ்சாலங்குறிச்சி கொண்டு செல்லப்பட உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்..நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1கோவில்பட்டி செய்தியாளர் -அ.சிவராமலிங்கம்

 

 

 

 

Tags :

Share via

More stories

Logo