நாகை,மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள்,  திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி களுக்கு விடுமுறை.

by Editor / 02-02-2023 09:03:54am
  நாகை,மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள்,  திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி களுக்கு விடுமுறை.

வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் தற்போதைய நிலையில் (அதாவது 02.02.2023 காலை 0830 மணி அளவில்) இலங்கையின் பட்டிகுலோவா நகருக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் கரையைக் கடந்துள்ளதாகத் தெரிகிறது. வளி மண்டலக் காற்று வேக மாறுபாடு காரணமாக அதிக அளவில் மேகக் கூட்டங்கள் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சூழ்ந்துள்ளன. எனவே இந்த மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை, ஓரிரு இடங்களில் கனமழை இன்று நிலவக்கூடும். 

 நாகை,மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.இரா.லலிதா உத்தரவு.
 

 

Tags :

Share via

More stories

Logo