ஸ்டாலினை முதல்வராக்குவோம்மேடையில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன். 

by Editor / 20-07-2023 05:04:42pm
 ஸ்டாலினை முதல்வராக்குவோம்மேடையில் உளறிய திண்டுக்கல் சீனிவாசன். 

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.இதில் திண்டுக்கல் நாகல் நகரில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம் என உளறினார். இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லவே பின்னர் மீண்டும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் பேசுகையில் நான் மாற்றி சொல்லி விட்டேன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம் என கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo