முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு பயணம்
கர்நாடக முதல்வராக சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி.கே.சிவகுமார் துணை முதல்வராக அறிவிக்கப் பட்டார். அதன்படி, மே 20ம் தேதி முதல்வர், துணை முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார். அதன்படி, நாளை மாலை பெங்களூரு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மறுதினம் நடக்க உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதனால், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :