ஜூம் செயலியின் பங்குகள் படுவீழ்ச்சி

by Editor / 09-09-2021 05:45:38pm
ஜூம் செயலியின் பங்குகள் படுவீழ்ச்சி

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியது என்பதும் உலகின் பல நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிந்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் மீண்டு வருகின்றன என்பதும் குறிப்பாக இந்தியாவில் பங்குச் சந்தை உச்சத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் குறைவு காரணமாக ஒரே ஒரு நிறுவனத்தின் பங்குகள் மட்டும் படு வீழ்ச்சி அடைந்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனம் ஜூம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன என்பதும் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வொர்க் ஃப்ரம் ஹோம் ஆகியவற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஜூம் செயலி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ஆம் ஆண்டு இந்த செயலி வடிவமைக்கப்பட்டாலும், கடந்த 2020 மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பேர் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர் என்பதும் தற்போது 50 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதும் அலுவலகங்களும் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் என்பதாலும் ஜூம் செயலிக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 17 சதவீதம் சரிந்தது என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக இருந்த ஜூம் தற்போது வெறும் 6.2 லட்சம் கோடி ரூபாய் என பாதியாக குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஜூம் நிறுவனத்தின் பங்குகள் படு வீழ்ச்சி அடைந்ததற்கு கூகுள் மீட் இன்னொரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் ஜூம் செயலியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியதால் தற்போது கூகுள் நிறுவனத்தின் கூகுள் மீட்டை அனைவரும் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via