அறநிலையத்துறை சார்பாக புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா

by Staff / 24-09-2022 11:25:22am
அறநிலையத்துறை சார்பாக புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா

இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத ஆன்மிகச் சுற்றுலாவை சென்னை - வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, மதிவேந்தன் தொடங்கி வைத்தனர். கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

 

Tags :

Share via

More stories