நல்ல கதை அம்சங்களோடு நடிகர்களை தவிர்த்து பார்க்கின்ற நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க வேண்டும்..

by Admin / 18-05-2024 01:27:27pm
 நல்ல கதை அம்சங்களோடு நடிகர்களை தவிர்த்து பார்க்கின்ற நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க வேண்டும்..

மக்களுக்கு இருக்கும் பொழுதுபோக்கில் மிக முதன்மையான இடத்தை பிடித்திருப்பது திரைப்படம். ஆனால் , பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் முன்பு போல் அதிகமான படங்கள் வெளிவருவதில்லை.. முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்கள் வருடத்திற்கு ஒன்றாகவும் இரண்டு வருடத்திற்கு ஒன்றாகவும் இருக்கின்ற சூழ்நிலையில், இரண்டாம் நிலையில் இருக்கின்ற... இல்லை.. மூன்றாம் நிலையில் இருக்கின்ற நடிகர்களின் படங்கள் மக்கள் விரும்புகின்ற பொழுதுபோக்கு அம்சங்களோடு இருந்தால்., அந்தப் படம், சக்கை போடு போட்டு..  பட தயாரிப்பாளரை கணிசமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கின்றது..

தற்பொழுது, கல்லூரி- பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதனால், குடும்பத்தில் இருப்பவர்கள் தொலைக்காட்சி தவிர்த்து திரையரங்குகளில் குழந்தைகளோடு படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அவர்கள் விரும்புகிற மாதிரியான பெரிய படங்கள்அதிகமாக வாராததினால்... தெரிந்த முகத்தோடு இருக்கின்ற நடிகர்களின்- இயக்குனர்களின் படங்களுக்கு பெருத்த வரவேற்பை வழங்கி வருகிறார்கள்.

சமீபத்தில் . சுந்தர்.சி. நடித்து இயக்கிய அரண்மனை- 4, கவின் கதாநாயகனாக நடித்த ஸ்டார்., சந்தானம் நடித்த இங்கு நான் தான் கிங்கு போன்ற படங்கள் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.. இந்தப் படங்களில் சுந்தர் .சி யின் அரண்மனை- 4 படம் மட்டும் அதிகமான வசூலை ஈட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளோடு- குடும்பத்தோடு இந்த படத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். சுந்தர். சி,தமன்னா, யோகி பாபு, கோவை சரளா, ராக்ஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் இதற்கு முன்பு வந்த அரண்மனை படத்தை போன்று முழுமையான திருப்தி இல்லாவிட்டாலும் பார்க்கலாம் என்கிற  ரீதியில் படத்தின் நகர்வு சென்று கொண்டிருந்தாலும் படம் 75 கோடியை ஈட்டி உள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

கவின் நடித்த ஸ்டார் படம் வளர்ந்து வருகின்ற ஒரு நடிகரின் படம் என்பதால்.. இளைஞர்களும் யுவதிகளும் ஆர்வத்தோடு திரையரங்கை நோக்கி படையெடுத்தார்கள். ஆனால், ஒரு சில நாட்களில் மட்டும் அதிகமான வசூலை பெற்ற படம் கிட்டத்தட்ட 20 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் இப்பொழுது  மெல்ல நகர்வதாகவே சொல்லப்படுகிறது.

.சந்தானம் நடித்த இங்கு நான் தான் கிங்  படத்தில் வழக்கமான அவர் தனித்து சிரிக்க வைக்கும் இடங்கள் பளிச்சென்று இருந்தாலும்... தம்பி ராமையா., பால சரவணன்  சேர்ந்து சில நகைச்சுவைகளை செய்து படத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்

..இந்தப் படம் சந்தானத்தின் முந்தைய வெற்றி படங்களை போல் இல்லாவிட்டாலும்  சந்தானம் காமெடியில் கலக்கி கதாநாயகனாக வந்ததின் காரணமாக படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு மக்கள் மெல்ல மெல்ல செல்வார்கள் என்கிற நிலை உருவாகலாம்.

அதனால், இந்த மூன்று படங்கள் தவிர்த்து... நிறைய சின்ன படங்கள் ,அதாவது குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் பல படங்கள் திரையரங்குக்கு வந்தாலும் ரசிகர்களின் ஆதரவு இன்மையின் காரணமாக அந்தப் படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றன .

அறிமுகமான முகங்களை மட்டுமே ரசிகர்கள் தேடாமல் எல்லா படங்களையும் பார்க்கக் கூடிய ஒரு சூழலுக்கு மக்களின் ரசிப்பு தன்மை மாற வேண்டும் என்பது பொதுவான ஒரு கருத்து

.சில நேரங்களில் நல்ல கதை இருந்தால் நடிப்பவர்களை பற்றி கவலைப்படாமல் ரசிகர்கள் திரையரங்கு நோக்கி செல்கிறார்கள் அந்தப் படத்தின் அம்சங்கள் பாராட்டக்கூடியதாக இருந்தால்,  படத்தை வெற்றியடைய செய்கிறார்கள் என்கிற கருத்தும் உலவி கொண்டிருக்கிறது. ஆக, முன்பு போன்று திரைப்படங்கள் அதிகமாக வராததின் காரணமாக ஒரு சில படங்கள் நல்ல வசூலை ஈட்டக் கூடிய சூழலும் உருவாகி இருக்கிறது. மலையாளத்திலிருந்து வெளிவந்த  மஞ்சுமேல் பாய்ஸ், பிரேமலு, ஆவேசம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களாலும் அதிகமாக பார்க்கப்பட்டு ...வசூலை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருப்பது... திரைப்படம் பார்க்கிறவர்கள் மொழியை பார்க்காமல், நல்ல கதை அம்சங்களோடு இருக்கின்ற படங்களை, நடிகர்களை தவிர்த்து பார்க்கின்ற நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க வேண்டும்..

 

 நல்ல கதை அம்சங்களோடு நடிகர்களை தவிர்த்து பார்க்கின்ற நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க வேண்டும்..
 

Tags :

Share via