பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது

by Staff / 29-03-2022 04:13:17pm
 பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது

ஜார்கண்ட் மாநிலம் காபியா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மத்திய பாதுபாப்பு படை போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து போலீசார் 2 துப்பாக்கிகள், குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள், மொபைல் போன்கள், பயங்கரவாதிகள் பயன்படுத்தும் உடைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் அவர்களை கைது செய்தனர். 3 பேரும் சதாரா மாவட்டத்தை சேர்ந்த முன்னிலால், ராகுல் கஞ்சு, மகேந்திரகஞ்சு என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல் உள்பட 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர்களுடன் இருந்த மற்ற நக்சலைட்டுகள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
 

 

Tags :

Share via