சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடபோவதில்லை என்று டி.டி.வி தினகரன்அறிவிப்பு.

by Admin / 24-01-2026 11:46:28pm
சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடபோவதில்லை என்று டி.டி.வி தினகரன்அறிவிப்பு.

அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடபோவதில்லை என்று   அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அண்மையில் மத்திய அமைச்சரும் பாஜக தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் முன்னிலையில் பா.ஜ.க தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணியில் தாம் இணைந்துள்ளதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில், இன்று அவர் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்பதே தனது குறிக்கோள் என்றும் அதற்காக தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை களைந்து கூட்டணியில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்ததோடு தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo