ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் அழைப்பு

by Staff / 30-12-2022 04:33:17pm
ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் அழைப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஸ்மிருதி இரானிக்கு அழைப்பு வந்துள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க மத்திய அமைச்சருக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் தீபக் சிங் அழைப்பு விடுத்தார்.ராகுல் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு தொகுதியின் முக்கிய பிரமுகர்களை அழைக்க கட்சி உத்தரவிட்டுள்ளதாக தீபக் கூறினார். இந்த யாத்திரைக்கு அமேதி தொகுதியின் பாஜக எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளும்கட்சி பிரமுகருக்கு காங்கிரஸ் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

Tags :

Share via