காதலன் தாலி கட்டியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், காதலன் பாலமுருகன் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்றார். பாலமுருகன், இளம்பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக தாலி கட்டியதோடு, மறுத்தால் வீடியோவை வெளியிடுவதாகவும், குடும்பத்துடன் எரித்துக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :


















