செயற்கை நுண்ணறிவு வருகையால் பலர் வேலை இழக்கும் அபாயம்.

by Editor / 25-12-2023 06:44:26pm
செயற்கை நுண்ணறிவு வருகையால் பலர் வேலை இழக்கும் அபாயம்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வருகையால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் பிரபல யுபிஐ செயலியான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் 'ஒன் 97 கம்யூனிகேஷன்'. இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பளச் செலவில் 15% மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக பேடிஎம்மில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இவர்கள் செய்து வந்த வேலையை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

Tags : செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

Share via

More stories

Logo