காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று (ஜூன் 27) பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட சிலரிடம் நான் இப்போதுதான் பேசினேன். அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார். ஆனால், போர் நிறுத்தம் குறித்து யாரிடம் பேசி வருகிறோம் என்ற தகவலை டிரம்ப் வெளியிடவில்லை.
Tags :