ஆட்சியை கவிழ்ப்பதில்தான் மோடி கவனம் அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் மோடிக்கு கவலை இல்லை என்றும், பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்ப்பதிலேயே அவர் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags :