குடிநீரில் கழிவுநீர் கலப்பு - மஞ்சள்காமாலை பாதிப்பால் சிறுவன் பலி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தீவளுர் கிராமத்தில், மஞ்சள்காமாலை பாதிப்பால் முத்தமிழ்நிலவன் (12) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீரில், சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால் கடந்த 22ஆம் தேதி 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Tags :