நெல்லை மண்கடத்தல் விவசாயிகள் சாலை மறியல் 100 லாரிகள் சிறைபிடிப்பு.
நெல்லை மாவட்டத்தில் விவசாய நிலத்தை பண்படுத்துவதற்காக வண்டல்மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவருகிறது. இந்தநிலையில் கூடங்குளம் அருகே சங்கனாபுரம், கணபதியாபுரம், ஜெயமாதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களில் அள்ளப்படும் மண், விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அரசு விதியை மீறி, செங்கல் சூளைகளுக்குக் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கடத்தலை எதிர்த்து விவசாயிகள் நடத்திய சாலை மறியலால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட லாரிகள் விவசாயிகளால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, சங்கனாபுரம் அருகிலுள்ள கொத்தன்குளத்தில் உள்ள செட்டிமொழியான்குளம் மற்றும் அதன் அருகிலுள்ள மேலும் இரண்டு குளங்களிலிருந்து அள்ளப்படும் குளத்து மண், விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படாமல், அருகிலுள்ள குமரி மாவட்டத்தில் உள்ள பல தனியார் செங்கல் சூளைகளுக்கு அதிக விலைக்குக் கடத்திச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், கடந்த 15 நாட்களாகவே இந்த லாரி ஓட்டுநர்களிடம் நேரடியாக எச்சரித்துள்ளனர். இருந்தபோதிலும், விதிகளை மீறி தொடர்ந்து லாரிகளில் மண்ணைக் கடத்திச் சென்றதால், நேற்று காலை சங்கனாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கொதிப்படைந்தனர்.
விவசாய நிலத்தை பண்படுத்துவதற்காக வண்டல்மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவரவுகிறது.இந்தநிலையில் குளத்து மண்ணைச் செங்கல் சூளைக்குக் கடத்திச் சென்ற லாரிகளை விவசாயிகள் இடைமறித்துச் சிறைபிடித்தனர். இந்த அநீதியைக் கண்டித்து, சங்கனாபுரம் பகுதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வெளி மாவட்டத்திற்கு மணல் கடத்திச் செல்ல இருந்த நிலையில், விவசாயிகள் அவற்றைச் சிறைபிடித்ததால், லாரிகள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால், கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
Tags : Paddy soil smuggling farmers block road, 100 trucks seized.



















