ஶ்ரீ அத்தி வரதர் தரிசனப் பெருவிழா  துவங்கிய தினம் இன்று.

by Editor / 24-07-2021 03:52:15pm
 ஶ்ரீ அத்தி வரதர் தரிசனப் பெருவிழா  துவங்கிய தினம் இன்று.

 


28 ஜூன் அன்று அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய ஶ்ரீ அத்தி வரதர், தைலக்காப்புகள் பூசப்பட்டு, அலங்காரம் செய்து, இன்று முதல் சயன நிலையில் அருள்பாலித்த ஶ்ரீ அத்தி வரதர்   01 ஆகஸ்ட் முதல் நின்ற நிலையில் 17 ஆகஸ்ட் வரை  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


பக்தர்களுக்கு  சுமார் 47  தினங்கள்  சயனநிலை மற்றும் நின்றநிலையில் அருள்பாலித்த அத்திமரத்தினால் உருவாக்கப்பட்ட  ஶ்ரீ அத்திவரதப் பெருமாளின் சிலை  அனந்தசரஸ் திருக்குளத்திற்குள் சயனநிலையில் 17 ஆகஸ்ட்  இரவு 10 மணிக்குமேல்  வைக்கப்பட்டது..  சிலை வைக்கப்படும்போது   இப்புனிதப்பணியில் ஈடுபட்டோர்தவிர மற்றவர்கள்   அனுமதிக்கப்படவில்லை. 
எதிர்வரும் 40 ஆண்டுகள் குளத்திற்குள் அவர் இருப்பதால் பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக் காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி  உள்ளிட்ட மூலிகைப்பொருட்களை  காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்திவரதர் சிலை மீது பூசப்பட்டுள்ளது.  


இனி மீண்டும் 2059 ல் ஶ்ரீ அத்தி வரதர் எழுந்தருள்வார், இதற்கு முன்பு 1854, 1892, 1937, 1979 ஆண்டுகளில்  இதற்கு முன்பு 1854, 1892, 1937, 1979 ஆண்டுகளில்  எழுந்தருளியுள்ளார். .
 

 

Tags :

Share via