இன்று பிரதமர் நரேந்திர மோடிG7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்கிறார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான்ஹிரோஷிமா வில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்கிறார். அங்கு அவர் ஜப்பான் பிரதமரோடும் கிசிடாவை சந்திக்கிறார். இந்த ஆண்டு ஜி 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளதால் இந்த ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில், உலகம் எதிர் கொள்ளும் சவால்களும் மற்றும் அவற்றை கூட்டாக எதிர் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் ஜி7 நாடுகளில் இருந்து அழைக்கப்பட்ட அதிபர்கள் ,பிரதமர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். ஹிரோஷிமா ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய தலைவர்களையும் பிரதமர் சந்திக்க உள்ளார். ஜப்பான் செல்லும் பிரதமர் அங்கு ஜி 7 மாநாட்டிற்கு பிறகு, போர்டு மோசபி பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார் .பப்புவா நியூ கி னியாவிற்கு இந்திய பிரதமர் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்..மே 22 அன்று இந்தியா பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பிற்கான உச்சி மாநாட்டில் அதாவது மூணாவது உச்சி மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்.. ஜேம்ஸ் மராப் பப்பு.நியூ கினியாவின் பிரதமர் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 14 பசி நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2011 இல் பிரதமர் நரேந்திர மோடி பிஜிக்கு சென்ற பொழுது எப் .ஐ. பி. ஐ. சி தொடங்கப்பட்டது. .மேலும் காலநிலை மாற்றம் நிலையான வளர்ச்சி திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி உடல் நலம் நல்வாழ்வு உள்கட்டமைப்பு போன்ற பிரச்சனைகள் இந்த தலைவர்களோடு பிரதமர் பேச உள்ளார் .பொருளாதார வளர்ச்சி தவிர பப்புவா நியூக்கினியா கவர்னர் ஜெனரல் சர்வாப், பிரதமர் மராபி மற்றும் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிற தலைவர்கள் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை பிரதமர் மோடி நடத்த உள்ளார். இதன் பின்னர், பிரதமர் அல்பானி அழைப்பின் பேரில் ஆசிரியரியாவின் சிட்னிக்கு பயணம் மேற்கொள்கிறார், இந்த ஆண்டு மார்ச் மாதம் புது தில்லியில் நடைபெற்ற முதல் இந்திய ஆஸ்திரேலிய வருடாந்திர உச்சி மாநாட்டை பின் தொடர்வதற்கும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது ,ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வணிக தலைவர்களுடன் பிரதமர் உரையாட உள்ளார், அத்துடன் சிட்னியில் உள்ள இந்திய வம்சா வழியினரையும் இந்தியர்களையும் சந்திக்க உள்ளார்.
Tags :