சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த போலி மருத்துவர் கைது

by Staff / 19-05-2023 12:28:17pm
சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த போலி மருத்துவர் கைது

கேரளாவின் மலப்புரம், வளஞ்சேரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். தனூர் ஓதுபுரத்தைச் சேர்ந்த முஹம்மது ரஃபி என்பவர் கைது செய்யப்பட்டார். சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோயை குணப்படுத்த தன்னால் முடியும் என்று அவரது தந்தையை தொடர்பு கொண்ட போலி மருத்துவர், வளஞ்சேரியில் உள்ள வீட்டிற்கு வந்து சிறுவனை சித்ரவதை செய்துள்ளார். சிறுவனின் அசாதாரண நடத்தை குறித்து குடும்பத்தினர் விசாரித்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல் தெரிய வந்தது. உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories