கொலையானவர் அடையாளம் தெரிந்தது.

by Editor / 09-12-2024 10:14:04am
கொலையானவர் அடையாளம் தெரிந்தது.

திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண்,கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் சம்பவ இடத்தில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.கொலைசெய்யப்பட்டுக்கிடந்தவர் 
 சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன் என்பவரும் இவர் தென்றல் குறிஞ்சி நகர் பகுதியில் குடியிருந்த வந்துள்ளார் இவர் கடந்து மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் இவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர் அதன் பேரில் சின்னாளப்பட்டி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இன்றைய தினம் தோமையார்புரம் பகுதியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

 

Tags : கொலையானவர் அடையாளம் தெரிந்தது.

Share via