4 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

by Admin / 02-01-2026 01:55:29pm
4 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, விருதுநகர், தேனி ,நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மழைப்பொழிவு தென்காசி மாவட்ட கடனாநதி பகுதியில் 23.9 சென்டிமீட்டர் மழையும் தேனி ,வீரபாண்டியில் 12 சென்டிமீட்டர்., விருதுநகர் கோமாபட்டி கான்சாபுரம், தம்பிபட்டி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது.  தென்காசி சிவகிரியில் 17 சென்டிமீட்டர் அதிக மழை பதிவாகியுள்ளது. குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்ட சுழற்சி காரணமாக ஜனவரி 7ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via