தவெக-வின் கொள்கை, கொடி அறிவிப்பு எப்போது

by Staff / 02-02-2024 03:40:38pm
தவெக-வின் கொள்கை, கொடி அறிவிப்பு எப்போது

அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபடுவேன் எனவும் கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது கட்சிப் பதிவுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via